நடவடிக்கை! கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பால் ... மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

தினமலர்  தினமலர்
நடவடிக்கை! கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பால் ... மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

திட்டக்குடி : திட்டக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மாடுகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு,குறு விவசாயிகள் சங்க தலைவர் பேரின்பம், திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலிடம் அளித்த கோரிக்கை மனு:திட்டக்குடி தாலுக்கா, கோடங்குடி, எழுமாத்துார் உள்ளிட்ட பல கிராமங்களில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது.கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கால்நடைகளுக்கு வரும் நோய்க்கு மருத்துவ செலவு செய்து சிகிச்சை அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

கால்நடைகளை நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது., கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.எனவே நோய் தாக்கம் அதிகமுள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தி உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை