கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோபிடன் டுவிட்

தினமலர்  தினமலர்
கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர்: ஜோபிடன் டுவிட்

நியூயார்க்: நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், கமலா ஹாரீசை துணை அதிபர் வேட்பாளராக நிறுத்துவேன் என ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடக்கிது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் ஜோபிடன் தனது டுவிட்டரில் கூறியது, தாம் அமெரிக்காவின் அதிபரானால் கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக நியமிப்பேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். ஜோபிடனின் அறிவிப்பு கறுப்பர் இனத்தவர்கள் வாக்குகளை கவரவே கமலா ஹாரீசை துணை அதிபர் வேட்பாளராக ஜோபிடன் அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.



இது குறித்து கமலாஹாரீஸ் டுவிட்டரில் கூறியது, துணை அதிபர் வேட்பாளராக என்னை ஜோபிடன் அறிவி்த்தது எனக்குகிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன் என்றார்.

தற்போது ஜனநாயக கட்சி செனட்டராக இருக்கும், கமலா கலிபோர்னியா அட்டர்னி ஜெனராலாகவும் இருந்தவர். தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருபவர்.
கலிபோர்னியாவில் இருந்து செனட்டுக்கு முதன்முறையாக 2016ல் தேர்வு செய்யப்பட்டவர் கமலா. இவரது வரவால், இந்தியவர்கள் உள்பட பல்வேறு இனத்தவர்கள், இளைஞர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.



மூலக்கதை