ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் | ஆகஸ்ட் 11, 2020

தினமலர்  தினமலர்
ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் | ஆகஸ்ட் 11, 2020

துபாய்: பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷாவை திட்டிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் 2வது இன்னிங்சின் 46வது ஓவரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ பாகிஸ்தானின் யாசிர் ஷா அவுட்டானார். அப்போது பிராட், யாசிர் ஷாவை தகாத வார்த்தையால் திட்டினார். இச்சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. ஐ.சி.சி., 2.5 விதிமுறைப்படி எதிரணி வீரர்களை திட்டுவது குற்றமாகும்.

இதனை விசாரித்த ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ கிறிஸ் பிராட் (ஸ்டூவர்ட் பிராட் தந்தை), ஸ்டூவர்ட் பிராட்டின் போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்தார். தவிர இவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.

கடந்த 24 மாதங்களில் பிராட், 3வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், இந்தியா (2018, ஆக. 19, இடம்: நாட்டிங்காம்), தென் ஆப்ரிக்கா (2020, ஜன. 27, இடம்: ஜோகனஸ்பர்க்) அணிகளுக்கு எதிராக அபராதம் பெற்றிருந்தார். இவர், இதுவரை 3 தகுதி இழப்பு புள்ளி பெற்றுள்ளார்.

மூலக்கதை