‘புயலுக்கு முன் அமைதி’: பும்ராவுக்கு புகழாரம் | ஆகஸ்ட் 11, 2020

தினமலர்  தினமலர்
‘புயலுக்கு முன் அமைதி’: பும்ராவுக்கு புகழாரம் | ஆகஸ்ட் 11, 2020

மும்பை: இந்திய அணியின் புயல் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 26. இதுவரை 14 டெஸ்ட் (68 விக்கெட்), 64 ஒருநாள் (104), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (59) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இதுவரை 77 போட்டிகளில் (82 விக்கெட்) பங்கேற்றுள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 13வது ஐ.பி.எல்., தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இந்நிலையில் மும்பை அணி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ரிலாக்சாக சேரில் அமர்ந்து ‘ஹெட்போனில்’ பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றை பதிவு செய்துள்ளது. இதில் ‘புயலுக்கு முன் அமைதி’ என, தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த பும்ரா, தற்போது முழு உடற்தகுதியுடன் மும்பை அணிக்காக 13வது ஐ.பி.எல்., தொடரில் விளையாட தயாராக இருப்பதை குறிக்கும் இப்போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மூலக்கதை