பெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா

தினமலர்  தினமலர்
பெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா

வாஷிங்டன்: பெர்சீட் எனப்படும் விண்கற்கள் பொழிவை ஆக.11 முதல் ஆக. 13 வரை கண்டு ரசிக்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா அறிவித்துள்ளது.

ஸ்விஃப்ட்-டட்டில் என்ற வால் நட்சத்திரம் சமீபத்தில் பூமியை கடந்து சென்ற போது விட்டுச் சென்ற குப்பைகள் காரணமாக கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து பெர்சீட் விண்கற்கள் வானில் தென்பட்டு வருகின்றன. தற்போது அவற்றின் எண்ணிக்கை மற்றும் அளவு அதிகரித்துள்ளதாலும் வானிலையைப் பொருத்தும் எவ்வித உபகரணங்களும் இன்றி விண்கற்கள் பொழிவினை வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.


இந்த விண்கற்கள் மிகவும் பிரகாசமாகவும் மணிக்கு 1,32.000 மைல் வேகத்தில் பயணம் செய்பவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்கற்கள் பொழிவை அதிகாலை 2 மணி முதல் விடியற்காலை வரை பொதுமக்கள் தெளிவாக வானில் பார்க்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாசமான திரைகள் கொண்ட உபகரணங்கள் வழியாக இவற்றை பார்ப்பதால் பார்வை பாதிக்கப்படு் வாய்ப்பு இருப்பதால் மொபைல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பெர்சீட் விண்கற்கள் பொழிவினை NASA Meteor Watch Facebook என்ற இணைய லிங்கில் நேரிடியாக கண்டுகளிக்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.

மூலக்கதை