செப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு..!! எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்

தினகரன்  தினகரன்
செப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு..!! எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்

டெல்லி: செப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. ரயில்சேவை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனவும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் செப்., 30 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. என அறிவிக்கப்பட்டது. சில மணி நேரத்திலேயே வெளியான தகவல் தவறானது என ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 22.15 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, வெளி மாநிலங்களில் சிக்சித் தவிக்கும் பயணிகளை மட்டும் மீட்டு கொண்டு வருதற்கு சிறப்பு ரயில்கள் மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இயக்கப்படுகிறது. இந்நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும், ஒரு நாள் தொற்று எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா கடந்த சில நாட்களாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனவே தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரயில், மெயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை  தற்போது அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பயணிகள், எக்ஸ்பிரஸ், விரைவு மற்றும் புறநகர் ரயில் சேவைகள் வரும் செப்., 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.இருப்பினும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை