வித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்

தினமலர்  தினமலர்
வித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்

வாஷிங்டன்: அமெரிக்க கணித பேராசிரியர் ஸ்டீவ் பட்லர். இவருக்கு இன்று அமெரிக்காவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தீர்க்க முடியாத பல கணித புதிர்களை தீர்த்து அவற்றை இணைய பக்கத்தில் விவரித்துள்ளார்.

தற்போது இவர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார். இதற்கு காரணம் அவர் அணியும் மாஸ்க் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்..! மாஸ்குகளில் பலவிதம் வந்துவிட்டது. தற்போது ஒரு புதுவித மாஸ்க் அமெரிக்க நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாஸ்க்கை ஆர்டர் செய்வோரது முகத்தை ஸ்கேன் செய்து கொள்கிறது. வாடிக்கையாளரின் முக அமைப்புக்கு ஏற்ப அவர்களது கீழ்த்தாடை, உதடு, வாய், பற்கள், மூக்கு ஆகியவற்றை மாற்றி விடுகிறது.

இந்த மாஸ்க்கை அணிந்தால், மாஸ்க் அணியாத சிரித்த முகம் எவ்வாறு காட்சியளிக்கும் அதேபோல மாஸ்க் அணிந்த பின்னரும் காட்சியளிக்கலாம். இந்த மாஸ்க்கை இவர் அணிந்து அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட, அது டுவிட்டரில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் பெற்றது.

மூலக்கதை