ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு!!!

தினகரன்  தினகரன்
ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு!!!

டெல்லி:  ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் உடன் இருந்துள்ளார். டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்திற்கு சென்று சச்சின் பைலட் பேசியுள்ளார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. இதனையடுத்து சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியே முகாமிட்டிருந்தார். இதற்கிடையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டமானது நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இதன்பின்னர் அதிரடி நடவடிக்கையாக சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து சச்சின் பைலட், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கிடையில் ஆகஸ்ட் 14ம் தேதி ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்தித்து பேசி வருகிறார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் உடன் இருந்துள்ளார்.

மூலக்கதை