அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு

அபுதாபி : அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 198 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. நோய் தொற்றால் இன்று புதிதாக 179 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 62,704 ஆக அதிகரித்தது. நாட்டில் கொரோனாவால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்தது.


அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 198 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 56,766 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 5,581 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் புதிதாக தொற்றுக்கு நாட்டில், 59,000 பேர் சோதனை செய்யப்பட்டனர். அரபு எமிரேட்சில் இதுவரை 5.5 மில்லியனுக்கு அதிகமானவர்களுக்கு தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை