கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமானது

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமானது

பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 93,908 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இருப்பினும் கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,985 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,78,087 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 107 பேர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 3,198 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் புதிதாக 1948 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மைசூருவில் நேற்று (ஆக.,9) புதிதாக 455 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,311 ஆனது. மாநில அளவில் மொத்தம் 80,973 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


மூலக்கதை