யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா

தினகரன்  தினகரன்
யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா

பார்சிலோனா: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட பார்சிலோனா அணி தகுதி பெற்றது. கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பார்சிலோனா - நேபோலி அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் லெங்லெட் 10வது நிமிடத்திலும், கேப்டன் லியோனல் மெஸ்ஸி 23வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.லூயிஸ் சுவாரெஸ் பெனால்டி வாய்ப்பில் (45+1’) கோல் போட்டார். நேபோலி வீரர் இன்சைனி (45+5’) பெனால்டி வாய்ப்பில் ஆறுதல் கோல் அடித்தார். முதல் கட்ட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியிருந்த நிலையில், 2ம் கட்ட ஆட்டத்தில் 3-1 என வென்றதன் மூலம் பார்சிலோனா அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2006-07 சீசனில் இருந்து அந்த அணி தொடர்ச்சியாக கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கால் இறுதியில் பார்சிலோனா - பேயர்ன் மியூனிச் அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை