கேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

தினமலர்  தினமலர்
கேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 63.5 சதவிகிதமானது.


இருப்பினும் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,331 ஆக உள்ளது. ஒரே நாளில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (ஆக.,9) புதிதாக பாதிப்பு ஏற்பட்டவர்களில் 76 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 78 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 1,026 பேருக்கு கொரோனா நோயாளிகளின் மூலம் தொற்று பரவியது. 103 பேருக்கு யார் மூலம் தொற்று பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று மட்டும் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 281 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 145 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 115 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 99 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 88 பேருக்கும், மற்றவர்களின் தொடர்பு மூலமாக தொற்று புதிதாக ஏற்பட்டது.


இன்றைய தேதியில் கேரளாவில் 1,49,357 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,745 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 12,347 பேர் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை