இப்போவே கியாரே அத்வானி மாதிரியா?

தினமலர்  தினமலர்
இப்போவே கியாரே அத்வானி மாதிரியா?

என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் என இரண்டு படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா. இதனாலேயே அவரை அஜித்தின் ரீல் மகளாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபகாலமாக விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார் அனிகா. அவற்றில் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் அவற்றை கோபமாக விமர்சித்து வருகின்றனர். இது போல் இனி போட்டோஷூட்களை இனி நடத்த வேண்டாம் எனவும் அவர்கள் கண்டித்து வருகின்றனர்.

ஆனால் ஹீரோயினாகும் முயற்சியில் அனிகா இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது உடலில் ஆடைக்கு பதிலாக வெறும் வாழை இலைகளை மட்டும் சுற்றிக் கொண்டு கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை அனிகா நடத்தியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் காலெண்டர் ஒன்றிற்காக இதே போல் போட்டோஷூட் நடத்தியிருந்தார். அவரைப் போலவே இந்த சிறுவயதில் இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறாரே என அனிகாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆனபோதும் அனிகா எதிர்பார்த்தது போலவே அவரது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விட்டது.

மூலக்கதை