ஹீரோவான யூ டியூப் நட்சத்திரம்

தினமலர்  தினமலர்
ஹீரோவான யூ டியூப் நட்சத்திரம்

டிக்டாக் செயலி மூலம் பல பெண்கள் ஹீரோயின் ஆகியிருக்கிறார்கள். அதேபோல யூ-டியூப் சேனல் மூலம் பலர் நடிகர்களாக உருவாகி வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் ராம் நிஷாந்த். இவர் பிளாக் ஷீப் என்ற யு-டியூப் தளத்தில் பிரபலமானவர். ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷீப் யூனிட் உருவாக்கிய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார்.
தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாகிறார். இந்த படத்தை பொதன்ராஜ் இயக்குகிறார். ஹைலைட் சினிமாஸ் சார்பில் பி.சிவகுமார் தயாரிக்கிறார். படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மூலக்கதை