ஏ.ஆர்.ரஹ்மான் தரும் மன அமைதிக்கான ஆலோசனை

தினமலர்  தினமலர்
ஏ.ஆர்.ரஹ்மான் தரும் மன அமைதிக்கான ஆலோசனை

இசையமைப்பாளர்கள் என்றாலே கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தான். நாம் ரசிக்கும் இசையை பாடல்களாக, பின்னணி இசையாக, வெறும் இசைக்கோர்வையாக படைத்துக் கொடுக்கிறார்கள். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் சினிமா பாடல்கள் இசையைத் தந்து நம்மை மகிழ்விப்பது ஒருபுறம் இருக்கிறது. அதே சமயம் அவர்கள் பேசுவதும் நம்மை ரசிக்க வைக்கிறது.

ரஹ்மான் மன அமைதிக்காக ஒரு கருத்தை டுவிட்டரில் உதிர்த்திருக்கிறார். “கண்களை மூடுங்கள்... நம் அனைவருக்கும் ஒரு நாள் நிச்சயம் இறப்பு இருப்பதை உங்கள் உள்ளத்தில் நினைத்துப் பாருங்கள். அது உங்களின் கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பேராசை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அழிக்க உதவும். நிபந்தனையின்றி அன்பாகவும், மகிழ்ச்சியை அனுபவிக்கவும், கொடுக்கவும் இது நம்மை மாற்றுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஒரு இசைச் சுற்றுப்பயணத்தில் அவருடைய டூர் பஸ் ஒன்றின் அறையில் அவர் அப்படி கண்களை மூடி தியானித்த புகைப்படத்தை இத்துடன் பகிர்ந்துள்ளார்.

மூலக்கதை