ஹன்சிகா பெயரில் நட்சத்திரப் பதிவு - ஆச்சர்ய பிறந்தநாள் பரிசு

தினமலர்  தினமலர்
ஹன்சிகா பெயரில் நட்சத்திரப் பதிவு  ஆச்சர்ய பிறந்தநாள் பரிசு

சினிமா நடிகர்கள், நடிகைகளை நட்சத்திரங்கள் என்று அழைப்பதும் உண்டு. ஆனால், ஒரு நட்சத்திரத்தின் பெயரையே ஒரு நட்சத்திற்காகாக அவரது ரசிகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா இன்று(ஆக.,9) அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதற்கு சிறந்த பரிசாக நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு ஹன்சிகா மோத்வானி என்ற பெயரை அவருடைய ரசிகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

“நட்சத்திரங்கள் மீது நான் எவ்வளவு பைத்தியம் என்பது உங்களுக்குத் தெரியும். நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவள் நான். என் பெயரை ஒரு நட்சத்திரத்திற்குப் பதிவு செய்ததைவிட வேறு ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசை நான் எதிர்பார்க்க முடியாது. இதைச் செய்த அனைவருக்கும் எனது நன்றி. ஒரு நட்சத்திரம் பிறந்துள்ளது,” என அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை