அனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் படம்

தினமலர்  தினமலர்
அனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் படம்

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 'கும்பளாங்கி நைட்ஸ்'. மதுஸ்ரீ நாராயணன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.. இந்தப்படத்தில் நடிகர் பஹத் பாசில் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். குறிப்பாக கடைசி 20 நிமிடம் பஹத் பாசிலின் நடிப்பு மிரட்டல் ரகம்.

சிறுவயதிலேயே தங்களைவிட்டு தாய் ஓடிவிட, தாங்களாகவே வளரும் நான்கு சகோதரர்களின் வாழ்க்கை தான் இந்தப்படத்தின் மைய கதை. ஆனால் பஹத் பாசிலையே ஓவர்டேக் பண்ணும் விதமாக காமெடி நடிகர் சௌபின் சாஹிர் உள்ளிட்ட நால்வர் அண்ணன்-தம்பிகளாக இந்த படத்தின் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.

சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இந்தப்படத்தை பாராட்டியுள்ளார். இதுபற்றி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அனுஷ்கா சர்மா, “என்ன ஒரு அற்புதமான படம்... அந்த அளவுக்கு அழகான டைரக்சன், திறமையான நட்சத்திரங்கள்” என சிலாகித்து கூறியுள்ளார்.

மூலக்கதை