தஞ்சாவூர் சர்ச்சை - அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதி

தினமலர்  தினமலர்
தஞ்சாவூர் சர்ச்சை  அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதி

நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது படப்பிடிப்பு நடந்த அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். அங்கு மருத்துவனையில் சில அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லாமல் இருந்தது.

அது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோதிகா, நான் தஞ்சாவூருக்கு சென்றபோது அங்குள்ள தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவில்லை. கோவிலுக்கு செலவு செய்யும் பணத்தை மருத்துவமனைக்கு செலவு செய்யுங்கள் என்றார். இவரின் பேச்சு சர்ச்சையானது.

இந்த நிலையில் திடீரென தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார் ஜோதிகா. குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கி உள்ளார். இதை வரவேற்றுள்ளார் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.

மூலக்கதை