கொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட மத்திய ஆசிய நாடு..!

தினமலர்  தினமலர்
கொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட மத்திய ஆசிய நாடு..!

மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை. ஆனால் இங்கு நிமோனியா பாதிப்பு இருக்கும் என சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இங்கு நிமோனியா சோதனை நடத்த பரிசீலித்து வருகிறது.


மத்திய தரைக்கடல் நாடுகளில் மிகவும் ஆரோக்கியமான இஸ்லாமிய நாடு துர்க்மெனிஸ்தான் எனக் கூறலாம். இங்கு கொரோனா மட்டுமல்ல, எச்ஐவி உள்ளிட்ட பிற நோய்களும் அண்டாது. அதற்கு முக்கியக் காரணம் இந்நாட்டின் அதிபர் கர்பாங்குலி பேர்டிம்முகமது அவர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த இவர் உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டக் கூடியவர். தங்களது நாட்டில் முன்னதாக புகையிலையை தடை செய்த இவர் தங்கள் நாட்டு குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க பல வழிகளில் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக நோயற்ற ஆரோக்கியமான நாடாக துர்க்மெனிஸ்தான் விளங்குகிறது.


தற்போது கொரோனா பாதிப்பு அறவே இல்லாத நாடுகளில் துர்க்மெனிஸ்தான் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் இங்கு நிமோனியா பாதிப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. இதில் உலக சுகாதார நிறுவனம் தலையிட்டு வீட்டுக்கு வீடு நிமோனியா சோதனை செய்யலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

மூலக்கதை