பஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
பஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு

பனாமா : பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 331 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பஹ்ரைனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இன்று புதிதாக 418 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 43,307 ஆக அதிகரித்தது. பஹ்ரைனில் புதிதாக 3 பேர் பலியாகினர். நாட்டில் கொரோனாவால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்தது.


பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 331 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 40,276 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 2,872 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 40 பேர் அதிதீவிர சிகிச்சையில் உள்ளனர். பஹ்ரைனில் நோய் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 9,395 பேர் பரிசோதிக்கப்பட்டனர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 8,86,095 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


மூலக்கதை