தேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்

தினமலர்  தினமலர்
தேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்

ஆக்லாந்து :நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இந்து கோவிலுக்கு விஜயம் செய்தார்.

நியூசிலாந்து நாட்டில் வரும் செப்.,19ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிற்கட்சி போட்டியிடுகிறது.


நியூசிலாந்து நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை 5சதவீத அளவில் உள்ளது. மேலும் நியூசிலாந்து நாட்டில் பேசப்படும் மொழிகளில் இந்திமொழி நான்காவது இடத்தில் உள்ளது குறி்ப்பிடத்தக்கது.


இதனிடையே தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைநகர் ஆக்லாந்தில் உள்ள ராதாகிருஷ்ணா கோவிலுக்கு விஜயம் செய்தார். தொடர்ந்து கோவில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டு ஆரத்தி விழா மற்றும் பிரசாதங்களை பெற்றுக்கொண்டார். மேலும் இந்திய சைவ உணவுகளையும் உட்கொண்டார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உடன் இந்திய தூதர் முக்தேஷ் பர்தேஷியும் கலந்து கொண்டார். இதனை இந்திய தூதர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மூலக்கதை