மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 12,822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,03,084-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 17,367-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 11,081 பேர் கொரோனாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,38,262-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மருத்துவமனைகளில் 1,47,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\r இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்திய அளவில் தினந்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\r மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2612-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 83 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை