அமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 8 வயதான இரண்டு சிறுமிகள் மற்றும் 10 வயதான சிறுவன் என 3 பேரையும் காப்பாற்றச் சென்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


29 வயதான மன்ஜீத் சிங் தனது மைத்துனர் மற்றும் பிற நண்பர்களுடன் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது 3 சிறுவ,சிறுமியர் ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டதை கண்ட அவர், தனது தலைப்பாகையை அகற்றி, ஒரு கயிறாக பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற முயன்றபோது எதிர்பாரதவிதமாக ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டார். 40 நிமிடங்களுக்கு பின்னர் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் குறித்து ரீட்லி போலீஸ் கமாண்டர் மார்க் எடிகர் கூறுகையில், ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டு 15 நிமிடம் போராடிய 3 சிறுவ சிறுமியர்களில் இருவர் மீட்கப்பட்டனர். ஒரு சிறுமி மட்டும் மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மன்ஜீத்சிங் இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் கலிபோர்னியா மகாணத்திற்கு வந்ததாகவும் அங்க டிரக்கிங் தொழிலை தொடங்க திட்டமிட்டிருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

மூலக்கதை