பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு ரூ 7.5 லட்சம் கோடியானது

தினமலர்  தினமலர்
பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு ரூ 7.5 லட்சம் கோடியானது

வாஷிங்டன்; பிரபல சமூகவலைதளமான பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூ 7.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அண்மையில் பேஸ்புக்கின் பங்கு மதிப்பு 6.5 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் 13 சதவீத பங்குகள் வைத்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் பேஸ்புக் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பில் இந்திய மதிப்பில் ரூ 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி கூடுதலாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகின் அதி பணக்காரர்களுக்கான கிளப்பில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு அடுத்தபடியாக மார்க் ஜுக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார். இதன்படி அமெரிக்க டாலர் மதிப்பில் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை