அபாய நிலையில் குடிநீர் குழாய் :ஆற்றில் தூர்வாரும் பணி தீவிரம்

தினமலர்  தினமலர்
அபாய நிலையில் குடிநீர் குழாய் :ஆற்றில் தூர்வாரும் பணி தீவிரம்

திருப்பூர்:நொய்யல் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரதான குடிநீர் குழாய் அபாய நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க, வெள்ளத்தின் நடுவே பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி சார்பில், மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டம் மூலம் ராட்சத குழாய்கள் பதித்து குடிநீர் கொண்டு வந்து வினியோகிக்கப்படுகிறது.

அவ்வகையில், ஸ்டேட் பாங்க் காலனி அமைந்துள்ள, ராயபுரம் பகுதியிலிருந்து ஆலங்காடு பகுதி வழியாக மங்கலம் ரோடு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக, நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
அதில், அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் மற்றும் மரக்கிளை ஆகியன குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் துாண்களை சுற்றி படர்ந்துள்ளது.தண்ணீரின் வேகம் மற்றும் அழுத்தம் காரணமாக குடிநீர் குழாய்க்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், குழாய் சேதமாவதை தடுக்கும் வகையில், ஆகாய தாமரை அகற்றும் பணி, வெள்ளத்தின் நடுவே மேற்கொள்ளப்பட்டது.

மூலக்கதை