சீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்

தினமலர்  தினமலர்
சீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்

அமெரிக்கா தொடர்ந்து சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப் கனடாவின் அலுமினியம் உள்ளிட்ட தாது பொருட்களுக்கு வரி விதிப்பதாகத் தெரிவித்தார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அமெரிக்கா தொடர்ந்து இதுபோல உலக நாடுகள் பலவற்றுடன் பகையை வளர்த்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது என அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வட அமெரிக்க பொருளாதார ஒப்பந்தத்தை மீறி டிரம்ப் அரசு செயல்படுவதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார்.


இந்த ஒப்பந்தம் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இடையே போடப்பட்டது. அமெரிக்கா தன்னை அமெரிக்க நாடுகளில் பெரிய நாடாக காட்டிக்கொள்ள இவ்வாறு செய்கிறது என கனடா குற்றம் சாட்டுகிறது.

மூலக்கதை