பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்துக்கு 277 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்துக்கு 277 ரன் இலக்கு

மான்செஸ்டர்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 277 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. ஷான் மசூத் 156, பாபர் ஆஸம் 69, ஷதாப் கான் 45 ரன் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 219 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. போப் அதிகபட்சமாக 62 ரன் விளாசினார். பட்லர் 38, பிராடு 29* ரன் எடுத்தனர். 107 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 46.4 ஓவரில் 169 ரன்னுக்கு சுருண்டது. யாசிர் ஷா 33, ஆசாத் ஷபிக் 29, ரிஸ்வான் 27, அபித் அலி 20 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு 3, வோக்ஸ், ஸ்டோக்ஸ் தலா 2, ஆர்ச்சர், பெஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

மூலக்கதை