கட்டிட உரிமையாளர்களுக்கு செக் வைக்க ரெஸ்டாரண்ட்களிடையே புதிய ஒப்பந்தம்

தினகரன்  தினகரன்
கட்டிட உரிமையாளர்களுக்கு செக் வைக்க ரெஸ்டாரண்ட்களிடையே புதிய ஒப்பந்தம்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் ஓட்டல் தொழிலுக்கு கடும் நஷ்டம். பெரிய ஓட்டல், ரெஸ்டாரன்ட்களுக்கு பல கோடி இழப்பு. இதனால் உரிமையாளருக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. சில ரெஸ்டாரன்ட்கள் வாடகையில் தள்ளுபடி கேட்கின்றன. வாடகையை தாமதமாக செலுத்த அவகாசம், அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்பது போன்றவை தொடர்பாக ரெஸ்டாரண்ட்களுக்கும், கட்டிட உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் உச்சம்பெற்றுள்ளது.  இதனால் நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட ரெஸ்டாரண்ட்கள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன. அதாவது, ஒரு வேளை உரிமையாளர் காலிசெய்ய சொல்லிவிட்டால், அங்கு வேறு ரெஸ்டாரண்ட்கள் வரக்கூடாது. அப்படி வருவதாக இருந்தால் காலி செய்பவர் அல்லது உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கி வர வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.  ஊரடங்கிற்கு முன்பு நடந்த வர்த்தகத்தில் 30 முதல் 40 சதவீதம்தான் தற்போது நடக்கிறது. சுத்தமாக வருமானம் இல்லை. உரிமையாளர்கள் காலி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். வாடகையை குறைக்கவும் மறுக்கின்றனர். ஓட்டல் தொழிலின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது.  ஆனால், நாங்கள் இருக்கும் கட்டிடத்தை வேறு ஒரு ரெஸ்டாரண்ட் நடத்த வாடகைக்கு விட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் காலி செய்யுமாறு நிர்பந்தம் செய்கின்றனர். தற்போதைய நிலைமையில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றுமையாக இருந்து, உரிமையாளர்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டியுள்ளது என ரெஸ்டாரண்ட் நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை