உடனே பரிசோதனை செய்யுங்கள் : கென் கருணாஸ் கோரிக்கை

தினமலர்  தினமலர்
உடனே பரிசோதனை செய்யுங்கள் : கென் கருணாஸ் கோரிக்கை

நடிகரும், சட்டசபை உறுப்பினருமான கருணாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து அவரது மகனும், நடிகருமான கென் கருணாஸ் தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அப்பாவுக்கு கொரோனா இருப்பதால் அப்பாவின் நண்பர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் அரசியல்வாதி மற்றும் சமூக சேவைகள் செய்து வருகிறார். அவர் தன்னுடைய தொகுதிக்கும் மற்ற இடங்களுக்கும் கடந்த சில தினங்களில் சென்று வந்திருக்கிறார். அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அவர் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். அவரது உடல் நிலை பற்றி கேட்டு வரும் மெசேஜ்கள் மற்றும் போன் கால்களுக்கு நன்றி. கடந்த சில தினங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் நீங்களே சென்று டெஸ்ட் எடுத்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். இது என் பணிவான வேண்டுகோள்.

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். விட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். அவசர தேவை இருந்தால் மட்டுமே வாருங்கள். ஏனென்றால் இது உங்களது குடும்பத்தின் உடல் நலத்தை பாதிப்பது மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை