மீரா மிதுனை இயக்கும் சக்தி எது?

தினமலர்  தினமலர்
மீரா மிதுனை இயக்கும் சக்தி எது?

இரண்டு படங்களில் தலா இரண்டு காட்சியில் நடித்து விட்டு தன்னை பெரிய நடிகையாகவும், சூப்பர் மாடலாவும் அறிவித்துக் கொண்டிருப்பவர் மீரா மிதுன். அழகி போட்டி மோசடியில் தொடங்கியது இவரது சர்ச்சை. அதன்பிறகு சமூக வலைத்தளத்தில் பிரச்சினைக்குரிய கருத்துக்களை கூறி அதன் மூலம் தனக்கென கூட்டத்தை உருவாக்கி கொண்டார். சகட்டு மேனிக்கு தனக்கு சிறிதும் தொடர்பில்லாதவர்களை கூட அவதூறாக பேசத் தொடங்கினார்.

"என்னை முதல்வர் ஆக்கினால் 3 நாளில் கொரோனாவா ஒழித்துவிடுவேன். மோடி என்னை சந்திப்பாரா?" என்கிற அளவிற்கு சென்றது அவரது வீடியோக்கள். ஆனால் தற்போது எல்லை மீறி விஜய் மனைவி பற்றியும், சூர்யாவின் மனைவி பற்றியும் இவர் வெளியிட்ட வீடியோ தமிழ் திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இருவரின் ரசிகர்கள் கொந்தளித்தாலும், ரசிகர்களை அமைதி காக்குமாறு இரு நடிகர்களின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

காரணம், தேவையில்லால் அவரை இன்னும் பெரிய ஆளாக்க வேண்டாம் என்று. மீரா மிதுனும் அதை எதிர்பார்த்து தான் இவ்வாறு பேசி வருகிறார் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். என்றாலும் இவ்வளவு துணிச்சலுடன் பேசி வரும் அவருக்கு பின்னால் ஒருவர் இருப்பதாக திரையுலகினர் உணர்ந்தாலும் அது யார் என்பதை அறிய முடியாமல் தவிக்கிறார்கள்.

விஜய், சூர்யாவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள பயமே ரசிகர்கள் ஏதாவது ஏடாகூடமாக செய்து அது தங்களுக்கு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என்பதுதான்.

மூலக்கதை