புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு

தினமலர்  தினமலர்
புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு

தமிழ் சினிமாவின் தாய் சங்கமாக இருப்பது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். இந்த சங்கம் உறுப்பின்களிடைய ஒற்றுமை இல்லாத காரணத்தால் அரசு உள்ளே நுழைந்து நிர்வாகத்தை கைபற்றியது. இதனால் இன்றைக்குள்ள சூழ்நிலையில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் சங்கம் முடங்கி கிடக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கத்தை உருவாக்கி உள்ளார். இதில் தற்போது படம் எடுத்துக் கொண்டிருப்பவர்கள்தான் உறுப்பினராக முடியும். ஆனால் இந்த சங்கத்தை பாரதிராஜா தொடங்க கூடாது. அவர் தலைவர் பதவியை விரும்பினால் அவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கிறோம் என்று தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னொரு பிரிவு தயாரிப்பாளர்கள், பாரதிராஜாவை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் திய சங்கத்திற்கு கமல் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: முடக்கத்தை உடைத்து முயற்சி எடுக்கையில் முன்னேரின் கமல்ஹாசன் வழிமொழிதல் அகமகிழ்வைத் தருகிறது. மூத்ததொரு கலைஞனின் "தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்" காலத்தின் தேவையென்ற புரிதல்போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக நம் தொடக்கம் போராடி நிரூபிக்கும் நன்றிகள். என்று கூறியுள்ளார்.

மூலக்கதை