கேரளா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

தினகரன்  தினகரன்
கேரளா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: கேரளாவில் ஏர் இந்தியா  விமான விபத்து சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிரங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழையால் விமானம் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டு விமானம் பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் உள்ளவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் நேற்று இரவிலிருந்து கன மழைச்சூழலில் செயல்பட்டு வருகிறார்கள். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுக்க கேரள இளைஞர்கள் வரிசையில் நின்று மனிதாபிமானத்தை காட்டியுள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில்,  விமான விபத்து சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன். இறைவன் இந்தக் கடுமையான சூழலில் அந்தக் குடும்பத்தினருக்கு வலிமையை அளிக்க வேண்டும், என கூறியுள்ளார். 

மூலக்கதை