நீலகிரியில் அதிக கனமழை தொடரும்

தினமலர்  தினமலர்
நீலகிரியில் அதிக கனமழை தொடரும்

சென்னை :சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: “ தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும்.
திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில், கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று மற்றும் நாளை இரவு வரை, கடல் அலைகள் 3.5 முதல் 4.4 மீட்டர் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் இவ்வாறு அந்த அறிக்கை உள்ளது.

மூலக்கதை