கேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்

தினகரன்  தினகரன்
கேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்

திருவனந்தபுரம்: கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானது அறிந்தவுடனேயே பல உள்ளூர் மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.  இதற்கிடையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ரத்தம் தேவைப்படுகிறது விருப்பமுள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம் என அரசு கோரிக்கை வைத்தது. இதையறிந்த நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனர். கொட்டும் மழை மற்றும் கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனைக்கு வந்து பலர் ரத்த தானம் செய்தது பலரையும் நெகிழவைத்துள்ளது.

மூலக்கதை