சீன நிறுவனத்தை எச்சரிக்கும் டிரம்ப்

தினமலர்  தினமலர்
சீன நிறுவனத்தை எச்சரிக்கும் டிரம்ப்

வாஷிங்டன்: டென்செண்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இணைய சாட்டிங் செயலியான விசாட். இதனை முன்னதாக அமெரிக்கா தங்கள் நாட்டில் தடை செய்தது. இந்த செயலியுடன் பிரபல பொழுதுபோக்கு செயலியான அடிக்கும் அமெரிக்கா தடை செய்தது. இதனால் தற்போது டென்சன்ட் நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

இதனால் அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் டென்செண்ட் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் டென்சன்ட் நிறுவனத்தின் தொழில்கள் முடக்கப்படும் என எச்சரித்துள்ளார் டிரம்ப். இதனால் ஹாங்காங் பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்கு 10ல் இருந்து ஐந்து சதவீதமாக சரிந்தது. இதனால் 'ஹாங்காங் பேங்க் இன்டெக்ஸ்' 1.6 சதவீதமாக சரிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பைட்டான்ஸ், டென்செண்ட் ஆகிய நிறுவனங்களை தற்போது எச்சரித்து வருகிறார். சீனாவிலிருந்து புகழ்பெற்ற டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய செயலிகளை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட்டால் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து பிற தொழில்களில் ஈடுபட முடியும். இல்லையெனில் இவற்றுக்கு தடை விதிக்கப்படும் என கூறியுள்ள டிரம்ப் இதற்கு 45 நாட்கள் கெடு விதித்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் அவர் நவம்பர் மாதம் வர உள்ள அதிபர் தேர்தலில் கடும் விளைவுகளை சந்திப்பார் என பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை