கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்...!! முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்...!! முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை கேரள அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். கோழிக்கோட்டில் நேற்றிரவு நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும் போது விபத்து ஏற்பட்டது. இரவு 7:38 மணியளவில் விபத்து ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளானது. மேலும் லேசான அளவில் நொறுங்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர் மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 123 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களின் மருத்துவமனை செலவை அரசே ஏற்கும். விமான விபத்தில் உயிரிழந்த நபர்கள் உள்பட பயணித்த அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை