சென்னையில் சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.43,080க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதாரமே நிலை குலைந்து இருக்கும் சூழ்நிலையிலும்  தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம் தேதி 41,616,  5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 18வது நாளாக நேற்று ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் ஆகும்.இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு சவரன் ரூ.43,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.31 குறைந்து ரூ.5,385-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமிற்கு  ரூ.20 காசுகள் குறைந்து ரூ.83.40க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை