அமெரிக்கர்களுக்கு கொரோனா சூழலால் விதிக்கப்பட்ட சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு: இந்தியா, சீனா செல்ல தடை நீடிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்கர்களுக்கு கொரோனா சூழலால் விதிக்கப்பட்ட சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு: இந்தியா, சீனா செல்ல தடை நீடிப்பு

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீக்கியுள்ள நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு அமெரிக்கர்களுக்கு மார்ச் 19ஆம் தேதி அந்நாட்டு வெளியுறவுத்துறை 4ம் நிலை பயண எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, அந்நாட்டு அரசு தடை விதித்தது. அதில் சில தளர்வுகளை கொண்டு வந்து அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\r எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்கள் தடை பட்டியலிலேயே நீடிக்கின்றன. கொரோனா காரணத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் பயணிக்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது அமெரிக்காவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு செல்ல அமெரிக்கர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியுள்ளது. இருப்பினும் சீனா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையாததால் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மூலக்கதை