வேளாண் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு மத்திய அரசு நிதியுதவி

தினமலர்  தினமலர்
வேளாண் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு மத்திய அரசு நிதியுதவி

புதுடில்லி:வேளாண் துறை சார்ந்த, 234 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 24.85 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, வேளாண் தொழில் முனைவோர் மற்றும் இத்துறை சார்ந்த புதுமையான முயற்சிகள் ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில், ‘ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் யோஜனா’ எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ், வேளாண், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது.

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ், 112 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 11.85 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.தற்போது மேலும், 234 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 24.85 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. இந்த வகையில் மொத்தம், 36.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் உள்ள, 29 வேளாண் வணிக பயிற்சி மையங்களில், இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்ற இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், விவசாயிகள் தங்களின் வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு இவை நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிகரமாக இருக்கிறது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை