இந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020

தினமலர்  தினமலர்
இந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020

புதுடில்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத இருந்த ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய மண்ணில் வரும் செப்டம்பர்–நவம்பரில் இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள், மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், இத்தொடரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு வரவுள்ளது. அப்போது, ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்ட அறிக்கையில், ‘‘பி.சி.சி.ஐ., மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) இணைந்து ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெஸ்ட் தொடருடன் சேர்த்து, இத்தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறோம். விரைவில் முழு அட்டவணை அறிவிக்கப்படும்,’’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை