இந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020

தினமலர்  தினமலர்
இந்தியாவில் உலக கோப்பை | ஆகஸ்ட் 07, 2020

துபாய்: இந்திய மண்ணில் 2021ல் திட்டமிட்டபடி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடந்தது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா பங்கேற்றனர். இதில் உலக கோப்பை தொடர்கள் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் படி, சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட ‘டுவென்டி–20’ உலக கோப்பை, தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் 2022ல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி 2021, அக்–நவ. ல் இந்தியாவில்  ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கும். 2021, நவ. 14ல் பைனல் நடக்கும்.

தவிர 2021ல் நியூசிலாந்து மண்ணில் நடக்க இருந்த பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை தொடர் 2022, பிப்.6–மார்ச் 7க்கு மாற்றப்பட்டது.

மூலக்கதை