கோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

தினகரன்  தினகரன்
கோழிக்கோடு விமான விபத்து; அவசர நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

கோழிக்கோடு: கரிபூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம்174 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று கோழிக்கோடுகரிபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சறுக்கியது. விபத்துக்குள்ளான விமானத்தில் 177 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பயணித்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

மூலக்கதை