பாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்

தினமலர்  தினமலர்
பாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து ஆக., 9 முதல் துவக்கம்

இஸ்லாமாபாத்: கொரோனா பரவல் காரணமாக, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் 9ம் தேதி (ஞாயிறு) முதல் துவக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 21 முதல் சர்வதேச விமான போக்குவரத்தும், மார்ச் 26 முதல் உள்நாட்டு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 9ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து பாக்., சிவில் விமான போக்குவரத்து துறை, அந்நாட்டு விமான போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: பாக்.,கில் சர்வதேச விமான போக்குவரத்து வரும் 9ம் தேதி முதல்(ஆக.,9 ஞாயிறு) துவங்கப்பட உள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பிருந்த நிலையின் படி, விமான நிலையங்கள் செயல்படும். பயணிகளை கையாளுகையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கான சர்வதேச நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை