தஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா

தினமலர்  தினமலர்
தஜிகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள சீனா

பீஜிங்: அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளை சீனாவின் தவறான போக்கு தஜிக்கிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சீனாவுக்கும் சிறிய ஏழை நாடான தஜிகிஸ்தானுக்கும் கடந்த 2010ம் ஆண்டு எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி பாமீர் பகுதியில் ஆயிரத்து 158 சதுர கி.மீ., பரப்பை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கும் நிலைக்கு தஜிகிஸ்தான் ஆளானது. இந்நிலையில் சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் ஒட்டுமொத்த பாமீர் பகுதியும் தங்களுக்கு சொந்தம் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளதால் தஜிகிஸ்தான் கவலையில் ஆழ்ந்துள்ளது.

சீனாவின் பழமையான பகுதியான பாமீர் உலக வல்லரசுகளின் அழுத்தம் காரணமாக 128 ஆண்டுகளாக சீனாவுக்கு வெளியே இருப்பதாக சீன வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தஜிகிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கங்களையும் சீனா குறி வைத்துள்ளதாக சொல்லப்டுகிறது. தஜிகிஸ்தானில் மட்டு்ம 145 தங்க சேமிப்பு கிடங்குகள் உள்ளன. சுரங்கங்களை மேம்படுத்த சீனாவுக்கு அந்நாட்டு அரசு அதிகாரம் வழங்கியிருந்தது. இதையடுத்து தஜிகிஸ்தானில் மேலும் சில பகுதிகளை கைப்பற்ற சீனா முயற்சி செய்து வருகிறது.

மூலக்கதை