உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.24 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.95 கோடியாக உயர்வு...65,015 பேர் கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.24 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.95 கோடியாக உயர்வு...65,015 பேர் கவலைக்கிடம்

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.24 லட்சத்தை தாண்டியது.  சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது  209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா,  இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,24,050 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும்  கொரோனாவால் 19,541,216 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,544,479 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,015 பேர்  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு 6,272,687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,086,864 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 42,578 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,427,669 பேர்  குணமடைந்தனர்.  * அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 164,094 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,095,524 ஆக அதிகரித்துள்ளது.* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 99,702 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,967,064 ஆக அதிகரித்துள்ளது.* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,725 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,77,135 ஆக அதிகரித்துள்ளது.* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,649 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 463,875 ஆக உயர்ந்துள்ளது.* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,503 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 361,442 ஆக அதிகரித்துள்ளது.* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,132 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 322,567 ஆக அதிகரித்துள்ளது.* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,511 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309,005 ஆக உயர்ந்துள்ளது.* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 249,756 ஆக உயர்ந்துள்ளது.* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,254 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216,315 ஆக அதிகரித்துள்ளது.* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,324 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197,921 ஆக அதிகரித்துள்ளது.* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,593 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121,226 ஆக அதிகரித்துள்ளது.* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,727 ஆக அதிகரித்துள்ளது.* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,154 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,501 ஆக அதிகரித்துள்ளது.* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,797 ஆக அதிகரித்துள்ளது.* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,815 ஆக அதிகரித்துள்ளது.* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,063 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில்  பலி எண்ணிக்கை  உயர்ந்துக்கொண்டு  வருகிறது.

மூலக்கதை