இந்திய-சீன ராணுவ மோதல்; வதந்தி பரப்பிய சீனர் கைது

தினமலர்  தினமலர்
இந்தியசீன ராணுவ மோதல்; வதந்தி பரப்பிய சீனர் கைது

பீஜிங்: கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பகுதியில் சீன இந்திய ராணுவத்தினர் மோதல் நடந்தது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் காயமுற்ற, மரணமடைந்த சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இன்னும் சீன வெளியிடவில்லை.


இந்நிலையில் சீன இந்திய மோதல் குறித்து ஓர் வதந்தியை பரப்பிய சீனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாங்டெங் என்ற நிறுவனம் சீன ராணுவத்துக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தாக்குதல் கருவிகளை தயாரித்து விற்றுவருகிறது.

இந்த நிறுவனம் அளித்துள்ள பாதுகாப்பு உடைகள் தரமற்றவை. இதன் காரணமாகவே சீன-இந்திய மோதலின்போது சீன ராணுவ வீரர்கள் பலர் மரணமடைந்துள்ளனர் என சோ லியாங் என்ற சீனர் இணையத்தில் வதந்தியைப் பரப்பி உள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாக, இதனை அடுத்து அவரை சீன போலீசார் கைது செய்துள்ளனர்.

உறுதி செய்யப்படாத ஒரு தகவலை அரசு அனுமதியின்றி வலைதளங்களில் பரப்பிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டார். கடந்த 3-ம் தேதி அவர் இந்தத் தகவலை இணையத்தில் வெளியிட்டார். இதனையடுத்து 4-ஆம் தேதி போலீசார் அவரைச் சுற்றிவளைத்தனர். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் அதற்காக மன்னிப்புக் கடிதமும் எழுதினார்.

தற்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி என்ற தனிமனித கருத்துக்களைப் பதிவிடும் ஆங்கில இணையதளத்தில் இவர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். பிரபலமான தளமான அது, இந்த சம்பவத்திற்காக சீன அரசிடம் மன்னிப்பு கேட்டு அவரது பதிவை நீக்கியுள்ளது.

மூலக்கதை