மகாராஷ்டிரா-பீகார் இடையே இந்தியாவின் முதல் விவசாயிகள் ரயில்: பியூஷ், தோமர் தொடங்கி வைத்தனர்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராபீகார் இடையே இந்தியாவின் முதல் விவசாயிகள் ரயில்: பியூஷ், தோமர் தொடங்கி வைத்தனர்

மும்பை: விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்கான நாட்டின் முதல் ‘கிசான் ரயில்’ சேவை நேற்று தொடங்கப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள தேவ்லாலி மற்றும் பீகாரில் உள்ள தானாப்பூர் இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது. தேவ்லாலியில் இருந்து நேற்று புறப்பட்ட இந்த ரயிலை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.தேவ்லாலியில் இருந்து விவசாய உற்பத்தி பொருட்களுடன் நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் சனிக்கிழமை (இன்று) மாலை 6.45 மணிக்கு தானாப்பூர்  சென்றடையும். ஞாயிற்றுக் கிழமை பகல் 12 மணிக்கு தானாப்பூரில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் இரவு 7.45 மணிக்கு தேவ்லாலியை வந்தடையும். இது, வாரம் ஒரு முறை இயக்கப்படும்.

மூலக்கதை