100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து

தினமலர்  தினமலர்
100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து

வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவன சி.இ.ஓ., மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை மிஞ்சியது.

100 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வந்ததன் மூலம் சென்டிபில்லியனர்கள் பட்டியலில் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருடன் மார்க் ஜூக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார். பேஸ்புக்கில் இருந்த 13 சதவீத பங்குகள் மூலம், மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கிய மக்கள், ஆன்லைனில் பொழுதை போக்கி வருவதால், அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும், மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு 22 பில்லியன் டாலரும், ஜெப் பெசோசுக்கு 75 பில்லியன் டாலரும் லாபம் கிடைத்துள்ளது.

தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் மூலம், தனிப்பட்ட ராஜாங்கம் நடத்தி, சிறிய நிறுவனங்களை வளர விடாமல் கட்டுப்படுத்துவதாக, பேஸ்புக், அமேசான், ஆப்பிள், , கூகுள் மீது ஆன்டி டிரஸ்ட் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க பார்லி., குழு, அந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் விசாரணை நடத்தியது. ஆப்பிள், அமேசான், ஆல்பாபெட், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின், தற்போதைய சந்தை மதிப்பானது, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் ஆகும். இது, 2018 ஐ இருந்ததை காட்டிலும், இரு மடங்காகும்.

இவர்களை தவிர்த்து, டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சிஇஓ போனி மாவின் சொத்து மதிப்பில் 17 பில்லியன் டாலர் அதிகரித்து, அவரின் சொத்து 55 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. மேலும், பின்டுவோடுவோ நிறுவனத்தின் கோலின் ஹூவாங்கின் சொத்து மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 32 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் பேஸ்புக், சில்வர் லேக் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீட்டை பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 22 பில்லியன் டாலர் அதிகரித்து, மொத்த சொத்து மதிப்பு 80.3 பில்லியன் டாலர் ஆக உள்ளது.

மூலக்கதை