நாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தினகரன்  தினகரன்
நாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி:  டெல்லியில் மின்சார வாகன கொள்கையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியட்டுள்ளார். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக இந்தியா அதிகப்படியான தொகையை செலவு செய்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.  இவ்விரு பிரச்னைகளுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய தலைநகரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும், மாசு அளவைக் கட்டுபடுத்தவும் மின்சார வாகனக் கொள்கையை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இந்த மின்சார வாகனக் கொள்கை நாட்டின் மிக முற்போக்கான கொள்கையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் புதிய மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படும் என்று நம்புகிறோம். மின்சார வாகனக் கொள்கையை செயல்படுத்த மின்சார வாகன அமைப்பு நிறுவப்படும் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை