காஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2-வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்: கடந்த 48 மணி நேரத்தில் 2வது பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீரின் காசிகுந்த் பகுதியில் பாஜகவை சேர்ந்த சஜத் அகமது கந்தே என்பவர் கிராம பஞ்சாயத்து தலைவராக உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை முகாமில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவரை தீவிரவாதிகள் தூப்பாக்கியால் சுட்டனர்.  இந்த தாக்குதலில் சஜத் அகமது கந்தே படுகாயம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் சஜத் அகமது கந்தே உயிரிழந்துள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த ஆரிப் அஹமது என்ற மற்றோரு பஞ்சாயத்து தலைவரை தீவிரவாதிகள் தூப்பாக்கியால் சுட்டனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை